தமிழை தவிர்த்து, சீனர் மொழி: சட்டத்தை மீறுகிறார்கள்- மனோ கணேசன்

370 Views

தமிழை தவிர்த்து, சீனர் மொழி,சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்து சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் இலங்கையில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல இடங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டு சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல் நடைபெற்று வருகின்றது. மேலும் சில பெயர் பலகைகளில் சிங்கள மொழியும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதை பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் எதிர்த்தும் வருகின்றனர். ஆனாலும் இந்த நிலை தொடரும் நிலைதான் உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன்,

“நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கியுள்ளேன். எனினும் பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் போராட்டம்தான் செய்ய  வேண்டி வரும்.

தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன் அகற்றப்பட்டது என  சீன துாதரகம் தெரிவித்துள்ளது.

 யோசித்து பார்த்தால், தமிழை புறக்கணிக்க சீனர், நமது  இலங்கை அரசிடம்தான் கற்றுள்ளனர் போல் தெரிகிறது. ஏனெனில் உள்ளூர் நிலைமை இதைவிட மோசம்” என்றார்.

Leave a Reply