தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார்

983 Views

தமிழீழ விடுதலைப் புலிகளால் பொருளாதார அபிவிருத்திக்கான கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் Root Sri அவர்கள் பிரித்தானியாவில் சுகவீனம் காரணமாக டிசம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை சாவடைந்துள்ளார்.

இந்த தமிழீழ ஆய்வு நிறுவனமே பின்னர் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமானது.

WhatsApp Image 2020 12 07 at 4.51.07 PM தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார்

பிரபலமான பௌதீகவியல் ஆசிரியராக இருந்து தமிழீழ விடுதலை விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 இல் இணைந்த இவர் ஒரு சிறந்த கல்விமான். மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அரும்பணியாற்றியவர். தாயகத்திலும் பிரித்தானியாவிலும் பல்துறை கல்வியாளர்களை உருவாக்கிய இவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு இலக்கு செய்தி நிறுவனம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

Leave a Reply