தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர் நினைவு வாரம் கடந்த செவ்வாய்க்கிழமை(21) ஆம் நாள் ஆரம்பமாகியுள்ளதுடன், அதனை மக்கள் உணர்வுடன் அனுஸ்ட்டித்து வருகின்றனர்.
யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் முதல் நாள் நினைவேந்தல் நடாத்தப்பட்டது. அதில் பல மக்கள் கலந்துகொண்டு இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட மாவீரர் நினைவிடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கோப்பாய் துயிலும் இல்லத்திற்க்கு முன்பாக மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வணக்கநிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதேபோல வன்னி, கிளிநொச்சி, மன்னார் போன்ற வட மாகாணத்தில் உள்ள பிரதேசங்களிலும்இ கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களிலும் மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பல இடங்களில் மக்களும், அரசியல் பிரதிநிதிகளும், அரசியல் கட்சி உறுப்பினர்களும், பொது அமைப்புக்களும் மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து நினைவேந்தலக்கான ஏற்பாடுகாளை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.