தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்

369 Views

நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை என சிங்கள கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளன யட்டியாந்தோட்டை மக்கள்
கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply