மத சுதந்திரம், வழிபாட்டு உரிமைகளுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு சென்று வந்த சில வாரங்களிலேயே, தமிழ்மக்களின் மத சுதந்திரமும் வழிபாட்டு உரிமையும் அச்சுறுத்துலுக்கு உள்ளாகியுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் பௌத்த பிக்குகளின் அச்சுறுத்தல், அடாவடித்தனம் குறித்து ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடனேயே இவைகள் நடக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழ் மக்களின் வழிபாட்டு பண்பாட்டு உரிமையினையும், மத சுதந்திரத்தனையும் உத்தரவாதப்படுத்துமாறு ஐ.நாவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.