தமிழரின் வாழ்வுரிமையைப்  பாதுகாக்க தமிழ் கட்சிகள் இணைந்து குழு ஒன்று அமைப்பு

407 Views

தமிழரின் வாழ்உரிமையை பாதுகாப்பதற்கும், மக்களை வழிநடத்திசெல்வதற்குமான நடவடிக்கைக் குழு ஒன்றை 10 தமிழ் கட்சிகள்இணைந்து உருவாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக அரசு முன்எடுத்துவரும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும் அதற்கு எதிராக போராடு வதற்கும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது .

தமிழ் கட்சிகள் இணைந்து முன்னெடுத்துவரும் தொடர் சந்திப்பின் ஒரு கட்டமாக இன்றைய தினம் யாழ்பாடி விடுதியில் நடைபெற்றது அதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள், இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளைஎடுப்பதற்குமாக இக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்குஇணைப்பாளர்களாக கே.சிவாஜிலிங்கம் , மற்றும் சிவிகே சிவஞானம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply