தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகு மூலம் சென்ற அகதிகள் கைது

தமிழகத்திலிருந்து படகு மூலம் சென்ற குழந்தைகள் உள்ளிட்ட 4 அகதிகள் யாழ்ப்பாணம் அருகே கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்ற குழந்தைகள் உள்ளிட்ட 4 அகதிகளை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தும் முகாமுக்கு 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் முகாமில் வசித்து வந்த சகாயராணி (60), அவரது மகள் மேரி லவுரா (35), இவரது குழந்தைகள் கவுரியல் ரிசாந்த் (9), டிலான் லியோ நட் (7) ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.