தனுஷ்க குணதிலக மீது பாலியல் குற்றச்சாட்டு: அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை

80 Views

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கவும் முழுமையான விசாரணை நடத்தவும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளது.

இதனை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (07) தெரிவித்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில்  தன்னிடம் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக  பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனுஷ்க குணதிலக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply