தனி வழியில் சஜித்? ஐ.தே.க.விலிருந்து விலகாமல் புதிய கூட்டை அமைக்கத் திட்டம்

390 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்காத தீர்மானத்தை ரணில் எடுத்துள்ள நிலையிலும் – கட்சியின் செயற்குழுவும் ரணில் கட்சித் தலைவராகத் தொடர அனுமதித்துள்ள நிலையிலும் – மேலும் கட்சித் தலைமைப் பதவி விடயத்தில் போராடாதிருக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார்.

இதன்படி புதிய அரசியல் கூட்டை அமைத்து அதன் அறிவிப்பை அவர் வெளியிடவுள்ளார். அந்த முன்னணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சஜித், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வேட்புமனுக் குழுவுக்கும் தலைமை வகிப்பார்.

இந்தப் புதிய அரசியல் கூட்டின் செயலாளர் நாயகத்தையும் சஜித்தே நியமிப்பார். அநேகமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவாரெனத் தெரிகிறது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சஜித் தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகின்றது

Leave a Reply