தனியார் காணியில் 100 அடி உயரத்தில் விகாரை

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

வலி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த விகாரை தனியார் காணியில் 100 அடி உயரத்தில் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில்  சமீபகாலமான தொடர்ந்து சைவ ஆலயங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ராஜபக்சே அரசாங்கத்தால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.