தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறிய 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தனிமைப்படுத்தல் பகுதிகளில் இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க நேற்று முதல் விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் தொழில் நுட்பப் பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது” என்றார்.
இந்தப் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் நேற்று மாலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



