தனது வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பீற்றர் இளஞ்செழியன்

484 Views

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள்  நினைவாக இன்றைய நாளில் உலகம் பூராகவும் வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தாயகத்தில் பல தடைகளையும், இராணுவக் கெடுபிடிகளையும் தாண்டி மக்கள் தங்கள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரான பீற்றர் இளஞ்செழியன் தனது வீட்டில் தனது வணக்கத்தை செலுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றை காரணம் காட்டி  முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின்  முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் தன்னுடைய  வீட்டில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.  நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தால் இவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையுத்தரவை பொலிசார் இவரின் வீட்டிற்குச் சென்று வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி நிகழ்வின் பின்னர் அவரது வீடு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

Leave a Reply