தந்தையின் செயல் எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது-சுனேத்திரா பண்டாரநாயக்க

தனது தந்தையால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பாரிய பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் எஸ்.டபியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது எழுப்பபட்ட கேள்விக்கு கருத்து அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஆம் நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன் அவர் எனது தந்தை.

ஆனால் இந்த நேயர் கேட்ட கோள்வியை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்

நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன். உண்மையை சொல்லியாகவேண்டும்.

ஆம் ஏன் எனது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்தார்? அரசியல் சந்தர்ப்பவாதம் .

அரசியல்ரீதியில் பிரபலமாவது –

ஆனால் உண்மையில் எனக்கு தெரியாது. தந்தையின் செயல் எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது.