தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

IMG 20240518 WA0041 தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று (18) சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை பிறப்பித்திருந்நது.

அத் தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் காரைதீவு வினாயகம் விமலநாதன் ஆகியோர்
நகர்த்தல் மனுவை சட்டத்தரணிகளூடாக சமர்ப்பித்தன் பேரில் நீதிமன்றம் அத் தடையுத்தரவு நேற்று வெள்ளிக்கிழமை விலக்கி கொள்ளப் பட்டது.

அதன் பயனாக பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் முன்றளில் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைப்பாளர் துஷாந்தன் ஏற்பாட்டில் சுடரேற்றி கஞ்சி வழங்கப்பட்டது.

IMG 20240518 WA0043 தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதான பிரமுகராக கலந்து கருத்துரைத்தார்.

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான க.சிவலிங்கம் பொ.செல்வநாயகம் திருமதி சுமித்ரா சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆலய வளாகத்தில் அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உறவுகளை நினைவு கூர்ந்து கஞ்சி வழங்கப்பட்டது.