பொது அமைப்புக்களிற்கான தகவல் அறியும் சட்டம் தொடர்பான பயிற்சிபட்டறை
பொது அமைப்புக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிபட்டறை இன்று காலை வவுனியா மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் முக்கியத்துவம் அதனை எதற்காக எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பல்வேறு விடயங்களை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கமலதாஸினால் தெளிவுபடுத்தப்பட்டது.