ஜேவிபி கிளர்ச்சியின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் – ஐநா

64 Views

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது அரச அதிகாரிகளால் இழைக்கப்பட்ட வன்முறைகளிற்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் நான்கு அமைப்புகள் இது தொடர்பான கூட்டு வேண்டுகோள் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளன.

1989 ம் ஆண்டு ஜேவிபியின் கிளர்ச்சியின் போது மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை,நீதிக்கு புறம்பான படுகொலைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐநா அமைப்புகள் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படாமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளன.

இழைக்கப்பட்ட குற்றங்களின் முக்கிய குற்றவாளிகளை (அரச அதிகாரிகள்  என அடையாளம் காணப்பட்டவர்கள்) பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு  நீதித்துறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து நான்கு அமைப்புகளின் ஐநா அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply