ஜேர்மன்: தமிழ் அகதிகளை நாடு கடத்த முயற்சி- தமிழ் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.