ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத் தமிழர்கள் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஜேர்மனியில் அகதி அந்தஸ்து கோரிய பல ஈழத்தமிழர்கள் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைக்கு மத்தியில் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

21 60bdf7ffc9bfc ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத் தமிழர்கள் - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய ஈழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது எனும் தலைப்பின் கீழ் அண்மையில் ஜேர்மனியில் இருக்கும் ஈழத்தமிழ் மக்களவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.

அதில், ஜேர்மனியின் நடவடிக்கை எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தருகின்றது என குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply