ஜெனீவாவில் எம்மை வெற்றிகொள்ள முடியவில்லை – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

575 Views

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகளில் 22 நாடுகளினுடைய ஆதரவினை மாத்திரமே மனித உரிமை பேரவையினால் பெற்றுக்கொள்ள முடியுந்தது. 25 நாடுகளினுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. 11 நாடுகள் அந்த யோசனைக்கு எதிராக வாக்களித்தன. ஏனைய 14 நாடுகள் தமது வாக்குகளை பிரயோகிக்கவில்லை” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கின்றார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று மாலை வாக்களிப்பு முடித்தபின்ன ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அதனுடைய அடிப்படை கொள்கைக்கு புறம்பாகச் செயற்பட முடியாது. ஒரு நாட்டுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் கொண்டுவந்துள்ள பிரேரணையை நிறைவேற்ற முடியாது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை தண்மையற்றவையாகும், ஏனெனில் நாம் முன்னராகவே இது தொடர்பில் கூறியிருந்தோம், இந்த நிலையிலேயே குறித்த பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றபோட்டுள்ளது.

இருப்பினும் ஜெனீவாவினால் எம்மை வெற்றிகொள்ள முடியவில்லை. அத்துடன் கொரோனா நிலைவரத்திலும் கூட இந்த விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். அதே போன்று மனித உரிமை மீறல்கள் நாட்டில் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தோம்.

அதே போல் ஐ.நாவினால் முன்மொழியப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தியின் 2023 வது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நாம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றோம். மேலும் நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களால் வடக்கு தொடக்கம் தெற்கு வரையில் சுதந்திரமாக வசிப்பதற்ககு ஏதுவான உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை போன்று எவராலும் நாட்டு மக்களை அடிமைப்படுத்த முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளோம். இவையனைத்தையும் புறம்தள்ளியே பிரிட்டன் போன்ற நாடு இத்தகையதொரு பிரேரணையை எமது நாட்டிற்கெதிராக முன்வைத்திருக்கின்றது.

இந்த நிலையில் 47 நாடுகளில் 22 நாடுகளினுடைய ஆதரவினை மாத்திரமே மனித உரிமை பேரவையினால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. இவற்றில் 25 நாடுகளினுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையாமையேற்பட்டது, ஏனெனில் 11 நாடுகள் அந்த யோசனைக்கு எதிராக வாக்களித்தன. ஏனைய 14 நாடுகள் தமது வாக்குகளை பிரயோகிக்காது சுயாதீனமாக இதிலிருந்து விலகிக்கொண்டன. இதனை நோக்கும் போது பெரும்பான்மையான நாடுகள் இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையே காணக்கூடியதாவுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply