ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் – அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிப்பு

ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிப்பு

ஜூலை மாதம் 01 ஆம் திகதி மு.ப. 09.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் நேற்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 16 இன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 09.30 மணிக்கு மணிக்குப் பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் நேற்று (27) அறிவித்திருந்தார்.