ஜுலியன் அசங்கே மீது மேலும் 17 வழங்குகள்

299 Views

விக்கிலீக்ஸ் இணையத்தள உரிமையாளர் ஜுலியன் அசங்கே மீது அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் மேலும் 17 வழக்குகளை தொடுத்துள்ளது.

அமெரிக்காவின் படைத்துறை ஆவணங்களை வெளியிட்டது, அதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டது, அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டது தொடர்பில் அமெரிக்கா நீதி மன்றம் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அசங்கே பிரித்தானியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன், அவர் விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் 90,000 ஆப்கான் போர் ஆவணங்கள், 400,000 ஈராக் போர் ஆவணங்கள், 800 குவந்தனமோ சிறை தொடர்பான ஆவணங்கள், 250,000 அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply