உள்ளூர் கடனகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை எவரும் மறுக்கமுடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திரந்தார்.
இந்த மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மக்களை குழப்புவதற்காக வங்கி கணக்குகளில் உள்ள பணங்களை மக்கள் எடுக்கமுடியாது என்று பொய்ப்பிரசாரம் செய்வதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார்.
மக்கள் வங்கியின் ஆளுநர் இது தொடர்பான முழுவிளக்கத்தையும் வெளியிட்டுள்ளதாக தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலை எதிர்பார்த்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த காலப்பகுதியில் மக்களுக்கு அநீதியை ஏற்படுத்துவார் என்று தாம் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது வெறுமனே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மக்களை பயமுறுத்துவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.