ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவலியுறுத்தி சம்பந்தனை சந்தித்த குடிசார் சமூகம்

611 Views

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவலியுறுத்தி யாழ் குடிசார் சமூகத்தினர் நேற்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.தமிழ்மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கைவிடுத்திருந்தது. எனினும், தமிழ்மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன்குறிப்பிட்டு, அந்தசந்திப்பைதவிர்த்துவிட்டார்.

இதன் பின்னர் யாழிலுள் சிவில் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பத்திரிகையாளர்கள் , யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக சம்பந்தனை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைக்க முடிவுசெய்தனர் .

திருமலை ஆயரின் மூலமாகவிடுக்கப்பட்ட சந்திப்புக்கள் இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன்ஏற்றுக்கொண்டார். இதன்படி, இன்றுகாலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் பங்களாவில் இந்தசந்திப்பு நடந்தது

Leave a Reply