தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திஸநாயக்க, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பலருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.