சவுதி அரசர் சல்மானின் மெய்க்காப்பாளர் சொந்தப் பிரச்சினை காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது சுடப்பட்டுள்ளார்.
அவருக்கும் மம்த-பின்-மேஷால்-அல்-அலி என்பவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது. அலி பொலிசாரிடம் சரணடைய மறுத்து விட்டதால், அவர் சுடப்பட்டார் என பொலிசார் தெரிவித்தனர்.
சுடப்பட்ட மெய்க் காப்பாளர் அசிஸ் ஃப்காம் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடன் ஏழு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜென் ஃப்காம் சவுதி மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர். அவர் அரசர் சல்மானுக்கு மிகவும் நெருக்கமானவர். நீண்ட நாட்களாக பணியில் இருந்த அவர், மறைந்த அரசரான அப்துல்லாவிற்கும் மெய்க்காப்பாளராக இருந்தவர்.
சமூக ஊடகங்களில ஃப்காமை “ஹீரோ“ என்றும் “காக்கும் தேவதை“ என்றும் புகழ்ந்து வருகின்றனர்.