சோளம் வயலில் விமானத்தை இறக்கி 226 பயணிகள் உயிர்காத்த ரசிய விமானிகள்

556 Views

ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 226 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது.

இதனால் இரண்டு என்ஜீன்களும் பழுதானது. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். இதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 226 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில்; விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

Leave a Reply