சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் பிணையில் விடுதலை

349 Views

சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்ட சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் பனிஸ்ரர் பிரான்சிஸ் இரண்டு 5 இலட்சம் ரூபாய்கள் பிணையில் கொழும்பு நீதி மன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத ஆயுத நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுவிஸ் தூதரகத்தின் பணியாளரை சிறீலங்கா அரசு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

எனினும் அவரின் விடுதலை தொடர்பில் சுவிற்சலாந்து அரசு தனது சிறப்பு அதிகாரி ஒருவரை அண்மையில் சிறீலங்காவுக்கு அனுப்பியதுடன், காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

சுவிஸ் நாட்டிற்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியமும், தனது கருத்துக்களை முன்வைத்திருந்தது.

Leave a Reply