சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் – மட்டு.நகரான்

இலங்கையின் 48வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை வடகிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிப்பதற்கும் அன்றைய தினத்தில் இலங்கை சிங்கள அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமது நியாயமான குரலை வெளிப்படுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையானது காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட காலம் தொடக்கம் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக தமிழர்கள் அகிம்சை ரீதியாக போராடினார்கள் அடக்கப்பட்டார்கள். ஆயுத ரீதியான போராடினார்கள் மௌனிக்கப்பட்டார்கள். தற்போது இராஜதந்திர ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையிலும் அதனையும் மௌனிக்க செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

Anne Sri lanka சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் - மட்டு.நகரான்
இந்த நாட்டில் தமிழ் இனம் வாழ்வதற்கு தகுதியற்றவர்களாக பார்க்கும் சிங்கள சமூகம் இந்த நாட்டில் தமிழர்களுக்கான நீதியையே சுதந்திரத்தையோ வழங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த நாட்டில் தமிழ் இனமும் ஒரு சுதந்திர இனம் அவர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கான அதிகாரங்களை வழங்கி தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கான நீதியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக தமிழர்கள் மத்தியிலிருந்து எழுந்துவருகின்றது.

வடகிழக்கு தமிழர்கள் தாயகம்.தமது தாயகத்தில் தங்களை தாங்களே ஆளும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட்டு,காணி அபகரிப்புகள் நிறுத்தப்பட்டு தமிழர்களின் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும். வடகிழக்கில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி வடகிக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியை நடாத்தவுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இந்த பேரணியானது நடைபெறவுள்ளதுடன் இந்த போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தினை வெறுமனே கடந்த கால போராட்டங்களை போன்று அல்லாமல் இந்த போராட்டம் ஊடாக சர்வதேசத்தின் கதவினை தட்டுவதற்கான போராட்டமாக நடைபெறவேண்டும் என்ற கோரிக்கைகள் இன்று கிழக்கிலிருந்து வலுப்பெற்றுவருகின்றது.

1583128823 uni students 2 சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் - மட்டு.நகரான்மட்டக்களப்பில் இந்த இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள அதேநேரம் கிழக்கு மாகாண ஆளுனரினால் சிங்கள சுதந்திர தினத்தை மட்டக்களப்பில் களியாட்டங்களுடன் முன்னெடுப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுவருகின்றது.

இவ்வாறான நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற வகையிலான குரல்கள் தொடர்ச்சியாக ஒலிக்கும் நிலைமையினை காணமுடிகின்றது.இந்த நிலைமையில் இந்த போராட்டம் குறித்து எங்களிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை இங்கு தொகுத்துவழங்குகின்றறோம்.

சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள்,கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம்,


இந்த நாட்டில் காலம்காலமாக தமிழர்கள் அடக்கப்பட்டு,ஒடுக்கப்பட்டே வருகின்றனர்.தமிழர்கள் தமக்கான கோரிக்கைகளையும் உரிமைகளையும் கோரும்போதேல்லாம் அடக்குமுறைகளை முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இங்கு ஆட்சி செய்தவர்கள் தமிழர்களை ஏமாற்றியே வருகின்றார்கள். இன்றும் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர். கடந்த காலத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவற்றிற்கு எல்லாம் நீதிகேட்டு போராடும் இனமாகவே நாங்கள் இருந்துவருகின்றோம்.

எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது.இவற்றினை நாங்கள் உரத்து கேட்கவேண்டிய நிலையுள்ளது. அதனால் எதிர்வரும் 04ஆம் திகதி முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்குவோம்.அனைவரும் இதற்கு ஆதரவு வழங்கி எங்களது குரலை வெளிப்படுத்தவேண்டும்.சர்வதேசத்திற்கு எங்களது சத்தம் கேட்கவேண்டும் என்றார்.

கிருஸ்ணபிள்ளை சேயோன்,தலைவர்,வாலிப முன்னணி ,வடகிழக்கு மாகாணம்,

இலங்கை சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. எம் இனத்தின் மீதான  வன்முறைகளும் பல்வேறு காலங்களில் நடைபெற்றது. இந்த நாட்டிலேயே ஒரு அடிமைப்பட்ட சமூகமாக சிங்கள பேரினவாதத்தால் பார்க்கின்ற நிலைமை இருக்கின்ற இந்த நேரத்தில் ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கேணும் எங்களுடைய தமிழ் பேசுகின்ற சமூகம் நிம்மதியாக வாழும் வேண்டுமென்ற நிம்மதி பெருமூச்சு எதிர்பார்த்து இருக்கின்ற நேரத்தில் எந்த சுதந்திர தினமும் இதுவரை  மனநிலையை ஏற்படுத்திவிடவில்லை.

அதேபோன்று எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தின நாளில் தமிழ் மக்கள் அதனை ஒரு கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்இந்த நாட்டில் பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்ட போது அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் சமூகமே. அதில் இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்களுடைய தந்தையை தேடிக்கொண்டு தங்களுடைய கணவன்மாரை தேடிக்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தேடிக்கொண்டு இருக்கின்றார்களா இல்லையா இறந்து விட்டார்களா என்கின்ற எந்த செய்தியும் இல்லாமல் தினம் தினம் இயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கான நீதி கூட இன்னமும் வழங்கப்படவில்லை. இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதியான தீர்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு இந்த நாட்டினுடைய சுதந்திரம் என்கின்ற அந்த கோஷத்தை நாங்கள் தமிழ் பேசுகின்ற சமூகம் முன்வைக்க முடியும் என்றார்.

தர்மலிங்கம் சுரேஸ்,தேசிய அமைப்பாளர்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி,

தமிழர் தாயகம் இந்த விடயத்தில் அந்த நாளினை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் வடகிழக்கு பூராக கறுப்பு பட்டி அணிந்து சர்வதேச சமூகத்திற்கு இன்னும் இந்த இலங்கை தீவில் இருக்கும் ஆட்சியாளர்களினால் தொடர்ந்தும் நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றோம் எமது மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. தமிழர்கள் இந்த தீவிலே வாழ்கின்ற சிங்களவர்கள் போன்று சுயநிர்ணய உரிமையோடு சம உரிமையோடு வாழக்கூடிய சூழல் இன்னும் உருவாகவில்லை. ஆகவே எங்களுடைய மக்களின் அவல நிலையினை வெளிப்படுத்துவது வழமை.

tnpf சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் - மட்டு.நகரான்இந்த கறுப்பு தின போராட்டங்களுக்கு நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஆதரவினை வழங்குவோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பதற்கான இந்த போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்கி நிச்சயமாக அந்த போராட்டத்தை எழுச்சி பெறச் செய்வோம்.

கே.சோபனன்,தலைவர், மட்டக்களப்பு மாவட்டம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி,


அன்பை முதன்மைபடுத்தி கடவுள் கொள்கையை நிராகரிக்கும் பௌத்தமதத்தை சேரந்த துறவிகள் கூட அமுக்க குழுவாக இருந்து சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் நில அபகரிப்பு தொல்லியல் என்ற போர்வையில் தொடர்கின்றமையும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தமிழர்தாயகத்தில் தொடர்ந்து இடம்பெறுவதும் இந்த நாட்டிலே சிறுபான்மையினர் அனுபவிக்கும் துயரமாகும் ,அத்தோடு தங்களது உறவுகளை தொலைத்து விட்டு தாய்மார் கண்ணீரோடு அலைகிறார்கள் இவர்களுக்கு எந்த தீர்வுகளும் இதுவரை இல்லை,மயிலத்தமடு மாதவணை பதிகளில் பண்ணையாளர்கள் மாடுகளை பராமரிக்க முடியாதவாறு மேய்ச்சல் தரைகள் அபகரிக்கபட்டுள்ளன இன்று நூற்றுக்கணக்கான நாளாக வீதியோரமாய் பண்ணையாளர்கள் நியாயம் கேட்டு போராடுகிறார்கள்.

இது பண்ணையாளர்,விவசாயிகள் தொடர்பான பிரச்சனையாக மாத்திரம் பார்க்க முடியாது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இதன் பின் உள்ளது இதன் மூலம் தமிழர் இனப்பரம்பலை குறைக்கும் திட்டம் இருக்கிறதாக சந்தேகிக்க முடியும் இவ்வாறான பல பிரச்சனைகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருவதால் சுதந்திர தின கொண்டாட்டம் என்பது எமக்கானது அல்ல அன்றைய தினம் கரிநாளே. அந்த நாளில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு இளையோர் அணி திரண்டு ஆதரவு வழங்கவேண்டும்.

கஜரூபன், மாணவர் சங்கம், கிழக்கு பல்கலைக்கழகம்,

கிழக்கில் தமிழர்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.வடகிழக்கில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறை மற்றும் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் எமது எதிர்ப்பினை தெரிவிக்கவேண்டியது கட்டாயமாகும்.

east student சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் - மட்டு.நகரான்எதிர்வரும் 04ஆம் திகதி காலை 9.30மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைதியான போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். தமிழர் தாயகத்தில் தமிழர்கள் நிம்மதியாகவும் உரிமையுடனும் வாழவேண்டும். அதற்காக இந்த போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு அழைக்கின்றோம் என தெரிவித்தார்.