சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களில், 60,674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி முதலான மாவட்டங்களே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply