சீரற்ற காலநிலையால் வவுனியா வடக்கு மக்கள் இடப்பெயர்வு – தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு களநிலவர வீடியோ இணைப்பு.!

599 Views

சீரற்ற காலநிலையால் வவுனியா வடக்கு மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மருதோடை, ஊஞ்சால்கட்டி, காஞ்சுரமோட்டை பகுதிகளின் மழை வெள்ளம் காரணமாக 102 குடும்பற்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 90 பேர் மருதோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் இவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுததாக மக்கள் கோருகின்றனர்.

இதுவரை 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் 05 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.செட்டிகுளம் பிரதேசசெயலக பிரிவில் 85குடும்பங்களை சேர்ந்த292 பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரிவில் 168 குடும்பங்கள்477 பேர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக பிரதேச செயலகங்கள் வழங்கிவருகின்றனர்.

மருதோடை அ.த.க.பாடசாலை மற்றும் மருதோடை பொதுநோக்கு மண்டபம்,செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம்,புளியங்குளம் ஆரம்பபாடசாலை,நைனாமடு பொதுநோக்கு மண்டபம், ஆகியவற்றில் இடம்பெயர்ந்தவர்கள்

Leave a Reply