சீன யுவான் வாங் 5 கப்பல் விவகாரம்- இந்தியாவிற்கு இலங்கை துரோகம் செய்துள்ளது: ராமதாஸ்

113 Views

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  கூறியுள்ளார்.

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை  துறைமுகத்தை அடைய இருக்கிறது.

இலங்கை துறைமுகத்தில் இக்கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அதன் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் இது  இந்தியாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என அவர் கூறியுள்ளார் .

Leave a Reply