சீனாவுக்கு வருமாறு கோத்தாவுக்கு அழைப்பு

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சா சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சீனா முன்வைத்துள்ளது.

நேற்று (21) சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் செங் சூயூவான் தலைமையலான குழு கோத்தபாயாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தது.
இந்த கலந்துரையாடல் நல்ல முறையில் அமைந்ததாகவும் இரு தரப்பும் உறவுகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இணைக்கம் தெரிவித்துள்ளதாகவும் சீனா தூதுவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரச தலைவர் முதலில் தனது அரசை பணிகளை ஒழுங்கமைத்த பின்னர் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோத்தபாயாவின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவே அமைந்துள்ளதாகவும், எதிர்வரும் 29 ஆம் நாள் அவர் அங்கு செல்லவுள்ளதாகவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.