சீனாவில் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி

364 Views

சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையில் சிக்கி மாரத்தான் (Marathon) ஓட்ட பந்தய போட்டி யில் பங்கேற்ற 21 வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் வடமேற்கு கன்சூ மாகாணத்தின் பைன் நகரில் உள்ள மலைப்பகுதியில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதில், 172 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாரத்தான் போட்டியின் போது ஆலங்கட்டி மழை, உறைபனி மற்றும் கனமழை காரணமாக 21 பேர் பலியானதாக அம்மாகாண ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply