அமெரிக்காவின் அப்பிள் தொலைபேசிக மற்றும் ஏனைய வெளிநாட்டு உற்பத்தி தொலைபேசிகளை சீனாவின் அரசியல்வாதிகள் மற்றும் மத்திய அரச அதிகாரிகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் முக்கிய அரச அதிகாரிகள் பல வருடங்களுக்கு முன்னரே அப்பிள் தொலைபேசிகள் பயன்படுத்துவது தடை செய்யபட்டிருந்தது. ஆனால் அது தற்போது பல திணைக்களங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
அப்பிள் தொலைபேசிகளின் ஊடாக அரச தரப்பின் பல தகவல்கள் ஒட்டுக்கேட்கப்படலாம் என்ற அச்சங்களே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுவதுடன், வெளிநாட்டு தொழில்நுட்டபத்தில் அதிகம் தங்கியிருப்பதை தவிர்க்கும் நடவடிக்கை இது எனவும் கூறப்படுகின்றது.
அமெரிக்க தயாரிப்பு தொலைபேசிகளின் பாவனையை அரச உயர்மட்டத்தில் ரஸ்யாவும் அண்மையில் தடை செய்திருந்தது. வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் இந்த தொலைபேசிகளை பயன்படுத்தி தகவல்களை திருடலாம் என்று காரணம் கூறப்பட்டிருந்தது.
சீன தயாரிப்பு குவாவே வகை தொலைபேசிகளை அமெரிக்க அரசியல்வாதிகள் பயன்படுத்துவதை அமெரிக்க அரசு தடை செய்திருந்தது. தமது தகவல்கள் திருடப்படலாம் என்ற காரணத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தது. அதனை சில ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றியிருந்தன.
சீனாவின் ரிக்-ரொக் சமூகவலைத்தளத்தையும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தடை செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.