சீனக் கட்சியின் நினைவு விழா – நாணயம் வெளியிடும் இலங்கை

371 Views

சீன பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கை அரசு சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விடயங்களை மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மேலதிக தகவல்களை அவர் வெளியிட மறுத்து விட்டார்.

வெளிநாடுகளின் நினைவு தினம் தொடர்பில் இலங்கை அரசு நாணயங்களை வெளியிடும் போதும், வெளிநாட்டு அரசியல் கட்சியின் விழாவுக்காக நாயணத்தை இலங்கை அரசு வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

சீனாவின் மத்திய வங்கியும், பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தங்க, வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளது.

Leave a Reply