சிறைச்சாலையில் கைதிகள் சிலர்  போராட்டம்

406 Views

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே தங்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

இதன் காரணமாக சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில்,கண்டி போகம்பறை பழைய சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிறைச்சாலையில்  இருந்து 5 கைதிகள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அவர்களைப் பிடிக்க பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்திய போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply