சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை மற்றும் பூஸா சிறைச்சாலை ஆகியவற்றுக்கே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
“21 சிறை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாகச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 15 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிர்வாக ரீதியிலான உதவிகளை வழங்கும் மற்றும் அநாவசிய தொடர்புகளைப் பேணும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.