சிறீலங்கா ஆயுதப்படையினருக்கு அதிக அதிகாரம் – கோத்தபயா நடவடிக்கை

683 Views

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற போர்வையில் சிறீலங்காவின் முப்படையினருக்கும் அதிக அதிகாரங்களை வழங்கும் உத்தரவு சிறீலங்கா அரசு தனது வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது.

நேற்று (22) வெள்ளிக்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த அறிவிப்பால் தமிழ் மக்கள் மீது அதிக வன்முறைகளை சிறீலங்கா ஆயுதப்படையினர் பிரயோகிக்கக்கூடும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

சிறீலங்கா காவல்துறை, இராணுவம், கடற்படை மற்றும் வான்படையினர் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் பெருமளவான காணிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், அவர்களை தொடர்ந்தும் ஒரு அச்சமான சூழ்நிலையில் வைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply