சிறீலங்கா அரசின் தடையை மீறி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழீழ மக்களின் விடுதலைக்கு போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதை தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வாசல் கதவுகளை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடையை பல்கலைக்கழக பீடாதிபதிகள் கூடி எடுத்த முடிவுக்கு அமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் தினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Jaff uni4 சிறீலங்கா அரசின் தடையை மீறி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலிJaff uni 2 சிறீலங்கா அரசின் தடையை மீறி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Leave a Reply