சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் கோத்தபாயா வெற்றி – நாளை பதவி ஏற்கின்றார்

சிறீலங்காவில் நேற்று (16) இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்சா அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார்.

முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நாளை (18) அரச தலைவராக பதவியேற்ற உள்ளதாககவும், இந்த வெற்றியை கட்சி ஆதரவாளர்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் எனவம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, 30 பேர் கொண்ட அமைச்சரவை புதிதாக அமைக்கப்படவுள்ளதாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச்செயலாளர் மகிந்தா அபயவர்த்தனா தெரிவித்துள்ளார்.