சிறீலங்காவின் சுதந்திரதினத்தில் காணாமல் போனவர்களை நினைவுகூரும் நிகழ்வு

336 Views

சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திரதினத்தில் சிறீலங்கா அரசினாலும் அதன் படையினராலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை வடபகுதியில் மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல்போனோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்துலக சமூகம் அதற்கான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து வவுனியா மாவட்ட காணாமல்போனோர் அமைப்பு மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் நேற்றுடன் (01) 1078 நாட்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply