சிறீலங்காவின் குற்றவியல் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – ஹனா சிங்கர்

245 Views

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பில் சிறீலங்காவின் குற்றவியல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்களை முதன்மைப்படுத்தியுள்ளார்.

  • பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை சட்டத்தில் உள்ள சட்டவிதிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
  • பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் வேண்டும்.
  • குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது பாராபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

சிறீலங்காவில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply