சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

443 Views

ஐக்கிய நாடுகள்சபையின்மனித உரிமைக் கவுன்சிலின் 46வது அமர்வில் 2015இல் 47 நாடுகளால் கொண்டுவரப்பட்டுச் சிறிலங்காவும் தான் அதனை அனுசரிப்பதாகக் கையெழுத்திட்ட மனித உரிமைக் கவுன்சிலின் 30/1ம் இலக்கத் தீர்மானமான சிறிலங்காவில் புனர்வாழ்வு,பொறுப்புக் கூறல் மனித உரிமைகள் என்பனவற்றை முன்னேற்றுதல் தொடர்பான தீர்மானத்தில் இருந்து விலகிக் கொண்ட சிறிலங்கா தனது நாட்டின் இறையாண்மைக்கும் அரசியலமைக்கும் இத்தீர்மானத்திற்கு அணுசரணையாக இருத்தல் எதிரானது எனத் தனது செயலுக்கு நியாயமும் கற்பித்துள்ளது.

இதன்மூலம் சிங்கள பௌத்த நாடாக சிறிலங்கா தன்னை அறிவித்து அந்நாட்டின் மற்றொரு இறைமையாளர்களான ஈழத்தமிழர்களுக்கான நல்லாட்சி, சனநாயகம்,மனிதஉரிமைகளை வன்முறைப்படுத்தி அவர்களுக்கான சட்ட ஆட்சியையும் நீதிச்சமத்துவத்தையும் ஆக்கிரமித்து அடக்குமுறை செய்துள்ளது. இதனை உலக அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையிலேயே செய்வதற்கு சட்டரீதியாக அதற்கு அதிகாரமளிக்கும் ஆவணமாக சிறிலங்காவின் அரசியலமைப்பையே அது உலகிற்குக் காட்டியுள்ளது.

சிறிலங்காவின் இச்செயற்பாடு ஈழத்தமிழர்களின் உரிமைகளை அழிக்காது தடுப்பதற்கு இரண்டு விடயங்களை உலகு நடைமுறைப்படுத்த புலம்பெயர் தமிழர்களும் உலகத் தமிழர்களும் உடனடியாக அனைத்துலக நாடுகளுக்கும், அனைத்துலக அமைப்புக்களுக்கும்,அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்னும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.Dinesh Gunawardena @UNHRC Feb 2020 supplied pic by MFA சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், தான் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு நாடு ஏற்காவிட்டால் ஐக்கியநாடுகள் மனித உரிமைக் கவுன்சில் மூலம் அதனை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வாக்கெடுப்புக்குக் கொண்டு சென்று சாதாரண மேலதிக வாக்கு மூலம் அதனை நிறைவேற்ற அதற்கு உரிமையுண்டு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,சிறிலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தான் எடுத்த முயற்சிகளை சிறிலங்கா பகிரங்கமாகவே மீறியுள்ளதால்,சிறிலங்காவில் மனித உரிமைகளை பாதுகாக்கக் கூடிய அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை காலந்தாழ்த்தாது உருவாக்கி அதனை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை முன் வாக்கெடுப்புக்குக் கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சிக்க,புலம்பெயர் தமிழர்களும் உலகத் தமிழர்களும் உடனடியாக உழைக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள்சபையில் மனிதஉரிமைகள் ஆணையகம் கொண்டு வந்து சாதாரண மேலதிக வாக்கு மூலம் நிறைவேற்றும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தமது தடுப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கும் உரிமை, ஐக்கிய நாடுகள்சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளுக்கும் இல்லை என்பதால் இதுவே ஈழத்தமிழர்களின் உரிமைகளை வெளிநாடுகளின் தலையீடுகளின்றி பாதுகாப்பதற்கான ஏற்புடைய நடைமுறை முறைமையாகக் காணப்படுகிறது.

இரண்டாவது சிறிலங்கா தான் தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதற்குக் காட்டிய முக்கிய நியாயப்பாடுகளான அதன் இறைமை,அதன் அரசியலமைப்பு இரண்டையும் சிறிலங்கா சிங்கள பௌத்தர்களுடையது என்று கருதிச் செயற்படுவதே இலங்கைத் தமிழர் பிரச்சினையாக உள்ளது.

இலங்கைத் தமிழர்கள்,பிரித்தானியக் காலனித்துவ அரசு 1833இல் கோல்புறூக் அரசியல் அமைப்பை இலங்கையில் அறிமுகப்படுத்தி பல அரசுக்கள் உடன் திகழ்ந்த இலங்கைத் தீவை ஒற்றையாட்சிக்குள் கொண்டு வரும் வரை இலங்கையில் தங்களுக்கான தனியான இறைமையுடனும், சிங்கள ஆட்சிக்குட்படாத அவர்களது ஆட்சியுடைய அரசுடனும் தமிழர்கள் வாழ்ந்தமையால்,அவர்களுக்கும் இலங்கையின் இறைமையில் உரிமையுண்டு, இலங்கைத் தமிழர்களாலும் அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட வேண்டும்.three sovereign regions in the island of ceylon colombotelegraph சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

இந்த அடிப்படை வரலாற்று உண்மைகள் குறித்த எண்ணம் எள்ளவுமில்லாத ; சிறிலங்கா ஆட்சியாளர்கள் படைபலம் கொண்டு தமிழர்களின் அரசியல் பணிவைப் பெற்று இலங்கைத் தமிழர்களின் இறைமையையும் அரசியலுரிமைகளையும் வன்முறைப்படுத்துவதே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்பதை உலகுக்குப் புலம்பெயர் தமிழர்களும் உலகத் தமிழர்களும் தெளிவாக எடுத்துரைத்தாலே ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

1948ம் ஆண்டு பிரித்தானியா தான் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்கும் பொழுது சிறுபான்மையினத்துக்கோ மதத்திற்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அது குறித்து பிரித்தானியப் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என்னும்; 29/2 பிரிவை உள்ளடக்கிய சோல்பரி அரசியலமைப்பை வழங்கி, மாட்சிமை தாங்கிய மகாராணியின் பிரித்தானிய அரசிடம் தமிழர்களின் இறைமையைச் சிறுபான்மையினர் உரிமை என்ற பின்னணியில் ஒப்படைத்தது.

இப்பிரிவு சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குறித்த அச்சங்களுக்கு விடையாக அமையுமென்றது. இதனால் இலங்கையின் இறைமை இலங்கைப் பாராளமன்றத்திடமும் பிரித்தானிய அரசிடமும் சுதந்திரத்தின் பின்னரும் தொடர்ந்தது.

இரஸ்யா இலங்கையை ஐக்கிய நாடுகள்சபையின் தனியுறுப்பு நாடாகச் சேர்க்கக் கூடாது என 1956 வரை இருமுறை தனது பாதுகாப்புச்சபைத் தடுப்புரிமையைப் பய்னபடுத்தியமை இந்த இறைமைப் பகிர்வை உலகிற்கு உறுதி செய்தது.

தமிழர்களுடைய இறைமையைச் சிங்களவர்களது இறைமையுடன் பகிரச் செய்த இந்த சோல்பரி அரசியலமைப்பில் இருந்து தமிழர்களின் குடியொப்ப விருப்புப் பெறப்படாத சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசு நிறைவேற்றப்பட்ட 22.05. 1972 முதல் இன்று வரை இலங்கைத் தமிழர்களை ஆளும் உரிமை சிறிலங்காவுக்கு இல்லை என்பதால் அரசற்ற நாட்டினத்தவராகவே இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால்தான் அவர்களுno fire zone after சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்டைய அரசியல் உரிமைகள் அவர்களுக்கு மீள்வதற்கு இடையில் எவ்வளவு வேகமாக அவர்களை இனஅழிப்புச் செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக சிங்கள பௌத்த பேரினவாதம் பேசும் பௌத்த பீடாதிபதிகளின் விருப்பையே தனது அரசியல் கொள்கையாகக் கொண்டு செயற்படும் சிங்களப் பெரும்பான்மைச் சிறிலங்கா அரசு செய்து வருகிறது என்பதைப் புலம்பெயர் தமிழர்களும் உலகத்தமிழர்களும் உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களும் ஏககாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டாலே ஈழத்தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு, அவர்களது மனித உரிமைகளைää சிறிலங்கா தொடர்ச்சியாக வன்முறைப்படுத்தி, அதன் அடிப்படையில் ஈழத்தமிழினத்தை உலக நாடுகளுக்கோ உலக அமைப்புகளுக்கோ அனைத்துலகச் சட்ட முறைமைகளுக்கோ, எவ்வித அச்சமுமின்றி,பகிரங்கமாகவே இனஅழிப்புக்கும் கலாச்சார இனஅழிப்புக்கும் உள்ளாக்கி, பிரித்தானிய காலனித்துவத்தால் தனக்குக் கிடைத்த சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற ஒற்றையாட்சி மூலம் தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து, தேசியத்தை சீரழித்து தன்னாட்சி உரிமையை மறுத்து ,சிங்கள பௌத்த பேரினவாதத்தையே ஈழத்தமிழர்கள் மேலான அரசியலாக வெளிப்படுத்தும் நிலையைத் தடுத்து நிறுத்த முடியும்.

Leave a Reply