469 Views
அமெரிக்காவின் தடையை பொருட்படுத்தாமல் இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் ரவைகளை வழங்குவதற்கு ரஷ்யா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இலங்கை இராணுவம் பயன்படுத்தும் எம்.ஐ. ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்கள், மிக் தாக்குதல் விமானங்கள், யுத்த டாங்கிகள் மற்றும் வேறு வகையான ஆயுத தளபாடங்கள் என்பவற்றுக்கான உதிரிப் பாகங்களை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் ரஸ்யாவிடமிருந்து இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யக் கூடாது எனத் தெரிவித்து அமெரிக்காவினால் இலங்கைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை இந்தியாவுக்கு விதிக்கப்படவில்லையெனவும் இன்றைய சகோதர நாளிதழொன்று அறிவித்துள்ளது.