பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு தேர்தல் சுற்று நிருபம் தொடர்பில் போதிய அறிவின்மையால் மக்களுக்கு வழங்கப்படவிருந்த காணிகள் பிரதேச செயலகத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன்குளம் எனும் கிராமத்தில் குடியேறியனர்
இவர்களுக்கு தல ஒருவருக்கு ஒரு ஏக்கர் வீதம் நூறு ஏக்கர் வயல் காணிகள் அவர்களின் வாழ்வாதரத்திற்காக பிரித்து வழங்கப்பட்டது.
பின்பு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் அக்காணிகளில் பயிர்செய்கையில் ஈடுபடவில்லை பின்பு 2009ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த வயல்காணிகளை வனவளத்திணைக்களம் கையகப்படுத்தி கொண்டது.
இதனால் காணிகளை இழந்த மக்கள் தங்களுடைய போராட்டங்களினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் குறித்த காணிகளை விடுவிக்குமாறு வனவளத் தினைக்களத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.
இக் காணிகளை விடுவிக்கும் முகமாக வனவளத் திணைக்களம் மற்றும் பூநகரி பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து களப்பரிசோதனை செய்வதற்கு இன்று(04.10.2019) தீர்மானித்திருந்தது.
இவ் வேளை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தனது சுயலாப அரசியலுக்காக தன்னிச்சையாக கலந்துகொள்ள முயற்சித்த போது இவ் விடயத்தினை ஊடகவியலாளர்கள் பிரதேச செயலகத்திற்கும் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதன்காரணமாக பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் சிறிதரன் கலந்துகொள்ளும் விடயமானது தேர்தல் ஆணையகத்தின் சுற்றுநிருபத்திற்கு முரணானது எனத் தெரிவித்து குறித்த களப் பரிசோதனையை பிற்போட்டுள்ளனர்.
தனது சுயலாப அரசியலுக்காக தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பாக போதிய அறிவில்லாமல் அதை மீற முற்பட்டதானால் தமக்கான காணி வழங்கும் செயற்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.