சிறப்பு முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

195 Views

திருச்சி சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 18வது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

WhatsApp Image 2021 06 26 at 12.04.16 PM சிறப்பு முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அகதிகள்,

 எங்களின் பிரதான கோரிக்கை இந்தியாவில் அகதிகளாக உள்ள எங்களை சிறப்பு முகாமில் அடைப்பது ஏன் , நீதிமன்றத்தில் தண்டனை முடித்தவர்களை மீண்டும் சிறையில் அடைப்பது ஏன்? அத்தோடு எங்களை விடுதலை செய்ய  வேண்டியும்  கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

WhatsApp Image 2021 06 26 at 12.04.10 PM சிறப்பு முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

இன்று மாவட்ட அச்சியார் நேரில் வந்து எங்கள் குறைகளை கேட்டு எங்களுக்கான  விடுதலை சம்பந்தமான நடவடிக்கையை எடுக்க முயற்சிப்பதாக கூறி விட்டுச் சென்றுள்ளார்  அவர் எம் விடுதலைக்கான  அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்” என்றனர்.

Leave a Reply