சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும்: துருக்கி அதிபர்

418 Views

அமெரிக்கா ஆதரவளிக்கும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை துருக்கி அதிபர் எர்டோகன் கூறும் போது, “எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள, அமெரிக்கா ஆதரவளிக்கும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு எதிராகத் துருக்கி தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதல் தரை வழியாகவும், வான்வழியாகவும் இருக்கலாம். எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் என்று கருதும் தீவிரவாதக் குழுக்களை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இது தொடர்பான பணிக்குத் தயாராகி வருகின்றோம்” என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் அசாத்திற்கு ரஷ்யா ஆதரவளித்து வருகின்றது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகின்றது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச் சண்டை நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக் கணக்கான மக்கள் வேறு நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் துருக்கியில் இடம்பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply