சிங்கள மேலாதிக்கவாதத்தை பரப்பும் செயலை பொதுபல சேனா தொடர்கிறது – அமெரிக்கா

சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களின் மேலாதிக்கத்தை பரப்பும் நடவடிக்கைகளில் பொதுபல சேனா தொடர்ந்தும் ஈடுபடுகின்றது என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மதங்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரச்சாரங்கள் குரோதத்தை உருவாக்கியுள்ளன என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுபல சேனா போன்ற சிங்கள தேசியவாத குழுக்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன என தெரிவித்துள்ள அமெரிக்கா, சிங்கள தேசியவாத குழுக்கள் மத மற்றும் சிறுபான்மையினத்தவர்களை சமூக ஊடகங்களில் இழிவுபடுத்துகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லீம் தமிழ் சமூகத்தினரிற்கு எதிராக குரோதங்களை தூண்டுபவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.