சிங்கள மக்களை இந்தியா தொடர்ந்து காப்பாற்றும் – சிறீலங்கா நம்பிக்கை

624 Views

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்துவருவதால் அது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவில் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாம் நம்புவதாக சிறீலங்காவின் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எனினும் கொரம்பகேயின் இந்த கருத்துக்கு ஆதரங்கள் இல்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. செயலாளரின் இந்த கருத்து தொடர்பில் தான் எதனையும் கூற விரும்பவில்லை என சிறீலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பேச்சாளர் எடோஸ் மத்தியூ புன்னூஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் எப்பிரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இணைந்து போட்டியிடுவதால் ஜெனீவா விவகாரத்தில் இந்தியா மௌனம் காக்கவே விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் தமிழகத்தில் இந்த முறை அதிக ஆசனங்களை பெற அது முனைந்து நிற்கின்றது.

ஐ.நா தீர்மானத்தின் 6 ஆவது பந்தியில் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது என்ற சரத்தை இந்தியா சேர்த்துள்ள நிலையில் இந்தியாவின் நிலை தொடர்பில் கொலம்பகே தெரிவித்துள்ள கருத்து வலுவற்றது என கொழும்பு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply