சிங்கப்பூரில் கார் அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்கள்

சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1990 ஆம் ஆண்டு அங்கு வாகன நெரிசல்களை குறைப்பதற்காக கார்களை வைத்திருப்பதற்கான 10 வருடத்திற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை நகரம் அறிவித்திருந்தது. இந்த அனுமத்திப்பத்திரம் இருந்தால் மட்டுமே அங்கு கார்களை வைத்திருக்க முடியும்.

எத்தனை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது என்ற கட்டுப்பாட்டை அரசு முடிவு செய்கின்றது. அதற்கு அமைவாக அங்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அனுமதிப்பதிர ஏலம் இடம்பெறும். அண்மையில் இடம்பெற்ற ஏலத்தில் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தக்கூடிய காரின் அனுமதிப்பத்திர விலை 146,000($106,619;£87,684) சிங்கப்பூர் டெலர்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அங்கு அனுமதிப்பத்திரம் மற்றும் வரிகளுடன் ஒரு Toyota Camry Hybrid காரின் விலை 250,000 சிங்கப்பூர் டெலர்களாகும் இது அமெரிக்காவில் கார்கள் விற்பனை செய்யப்படும் விலையை விட ஆறு மடங்கு அதிகமாகும். அதாவது அங்கு கார் வைத்திருப்பது மிகவும் செலவீனமானது. சாதாரண சிங்கப்பூர் தொழிலாளரின் சம்பளம் ஆண்டுக்கு 70,000 சிங்கப்பூர் டெலர்களாகும்.

5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 1 மில்லியன் கார்களே உள்ளன. பழைய கார்கள் அகற்றப்படும் எண்ணிக்கைக்கு ஏற்பவே புதிய கார்கள் அங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.